சென்செக்ஸை அடிச்சி தூக்கிய ஜோ பைடன்… மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

சென்செக்ஸை அடிச்சி தூக்கிய ஜோ பைடன்… மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

வரலாறு காணாத உச்சமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகிவருகிறது. சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னரே 30 நிறுவன பங்குகளின் உயர்வால் 300 புள்ளிகளுக்கு மேல் பெற்று 50,127 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ்-ஆட்டோ, அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்), டெக் மஹிந்திரா, டைட்டன், ஏசியன்பெய்ன்ட்ஸ் ஆகிய பங்குகள் மட்டுமே 1.43 சதவிகித உயர்வு பெற்றன.

சென்செக்ஸை அடிச்சி தூக்கிய ஜோ பைடன்… மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

மும்பை பங்குச் சந்தையில் மேற்கூறிய பங்குகள் பெருமளவு லாபம் ஈட்டியுள்ளதால், அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேசிய பங்குச்சந்தை நிப்டியும் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் உயர்வு பெற்று 14,738 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுள்ளன.

சென்செக்ஸை அடிச்சி தூக்கிய ஜோ பைடன்… மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதே வரலாறு கண்டிராத பங்குச்சந்தை ஏற்றத்திற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.