• April
    02
    Thursday

Main Area

Main



உணர்ச்சிகரமான பேச்சு போதாது... பிரதமர் பேச்சுக்கு கேரள முதல்வர் பதிலடி!

Kerala-CM-vs-PM-Modi
Kerala-CM-vs-PM-Modi

பொது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தாதீர்கள், வேண்டுமானால் என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள் என்று மோடி உணர்ச்சிகரமாக பேசியதற்க்கு கேரள முதல்வர் ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

Modi @ Delhi


டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது. "குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து பரப்பப்படும் பொய்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சில நகர்ப்புற நக்சல்களும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்த வதந்திகளைப் பரப்பி வருகின்றன. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள்" என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். அதில் அவர், "திட்டங்களுக்கான பயனை பெறும்போது அவர் சந்த சாதியை மதத்தைச் சார்ந்தவர் என்ற பார்ப்பதில்லை என்று மாண்புமிகு பிரதமர் தன்னுடைய பேச்சில் தெரிவித்துள்ளார். தன்னுடைய வார்த்தையை தற்போது நிரூபிக்க வேண்டிய அவசியம் பிரதமுருக்கு ஏற்பட்டுள்ளது. உணர்ச்சிகரமாகப் பேசுவது மட்டும் போதாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படை பிரச்னையே அது மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதுதான்" என்று கூறியுள்ளார்.

 

 

2018 TopTamilNews. All rights reserved.