சீனியர்கள் வெளியேறுவார்கள்! தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும்! அதிர்வை ஏற்படுத்திய அழகிரி

 

சீனியர்கள் வெளியேறுவார்கள்! தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும்! அதிர்வை ஏற்படுத்திய அழகிரி

ழக்கம்போலவே திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி.  சீனியர்கள் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் இருவரும் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு சென்று, மேலும் பல சீனியர்கள் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மு.க.அழகிரியும் அதையே சொல்லி பரபரப்பை கூட்டியிருக்கிறார்.

பதவி விவகாரத்தினால்தான் வி.பி.துரைசாமியும், கு.க.செல்வமும் வெளியேறியதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பதவி விவகாரம் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு.  அது விரைவில் வெளிவரும் என்று அதிரவைக்கிறார் அழகிரி.

சீனியர்கள் வெளியேறுவார்கள்! தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும்! அதிர்வை ஏற்படுத்திய அழகிரி

ஐ.டி. டீம் ஒருபுறம் இருக்க, தேர்தலில் சமாளிக்க இந்த டீம் போதாது என்று ஐ பேக் டீமையும் கொண்டு வந்து கட்சிக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கிறது திமுக. ஆனால் அழகிரியோ, இப்போதே திமுகவின் நிலைமை எப்படி என்று  பார்த்தீர்களா? தேர்தலுக்கு பின் இன்னும் சரிவை சந்திக்கும் என்று அடித்துச்சொல்கிறார்.

கருணாநிதி இருந்தபோதே பதவி விவகாரத்தினால் பல சீனியர்கள் வெளியேறுவதாக பேச்சு இருந்தாலும், அவர்களை வெளியே விடாமல் தக்க வைத்துக்கொண்டார்.  ஆனால், இன்று  நிலைமை தலைகீழாக இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் கட்சிக்குள் தலையெடுத்தபோதே அதிருப்தி அலைகள் அதிகம் அடிக்கத்தொடங்கிவிட்டன.  இப்போது தலைவர் ஆன பின்னர் அதற்கு சொல்லவே வேண்டியதியதில்லை போலும்.  இந்நிலையில், உதயநிதிஸ்டாலின் தலையீடு அதிகரிக்க, அதிகரிக்க, சீனியர்கள் வெளியேறும் பேச்சும் அதிகரிக்கிறது.

சீனியர்கள் வெளியேறுவார்கள்! தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும்! அதிர்வை ஏற்படுத்திய அழகிரி

துரைமுருகன், ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்கள், கட்சியில் இருந்து வெளியேறும் முடிவில் தாங்கள் இல்லை.  எங்களுக்கு எல்லாமே திமுகதான் என்று சொல்லிவந்தாலும், அவர்கள் திமுகவில் இருந்து வெளியேறும் முயற்சியில் இருப்பதாகவே  தகவல் கசிகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களின் பலத்தை காட்ட நினைக்கும் பாஜக, திமுகவில் இருந்து வெளியேற நினைக்கும் சீனியர்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அழகிரி பாஜக பக்கம் சாய்ந்துவிடுவார் என்று  நெடுநாளாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அவர் இன்று திமுகவில் இருந்து சீனியர்கள் வெளியேறுவார்கள் என்று சொல்லியிருப்பதன் மூலம், அவர்தான் சீனியர்களை வெளியேற்றுகிறார். சீனியர்கள் பலரை வெளியேற்றி பாஜக பக்கம் கொண்டு சேர்த்துவிட்டு, கடைசியில் தானும் பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்ற பேச்சு திமுகவினரை திக்குமுக்காட வைத்திருக்கிறது.

இதனால், அழகிரியை சமாதானப்படுத்தி அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டு, முக்கிய பொறுப்பு வழங்கிவிட்டால் இதை எல்லாம் சரி செய்துவிடலாம் என்று துடிக்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள் பலரும்.