ராமர் கோயில் பூமி பூஜை… காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் வித்தியாசமான டிவிட்

 

ராமர் கோயில் பூமி பூஜை… காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் வித்தியாசமான டிவிட்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று பல்வேறு தரப்பு தலைவர்களும் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்தார். நேற்று சசி தரூர் மற்றும் கபில் சிபல் உள்ளிட்டோர் வரலாற்று சிறப்பு மிக்க பூமி பூஜை குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.

ராமர் கோயில் பூமி பூஜை… காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் வித்தியாசமான டிவிட்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் டிவிட்டரில், இறைவன் ஸ்ரீராம் அனைவருக்கும் நீதியை எடுத்துக்காட்டுகிறார். நியாயமான நடத்தை, அனைத்து நடவடிக்கைகளிலும் நேர்மை மற்றும் உறுதி, இருண்ட காலங்களில் இந்த மதிப்புகள் தேவை. அவை அந்த நிலமெங்கும் பரவியிருந்தால், ராம ராஜ்ஜியம் வெற்றிகரமான மதவெறிக்கு சந்தர்ப்பமாக இருக்காது. ஜெய்ஸ்ரீராம் என பதிவு செய்து இருந்தார்.

ராமர் கோயில் பூமி பூஜை… காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் வித்தியாசமான டிவிட்

மற்றொரு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் டிவிட்டரில் வித்தியாசமாக தனது கருத்தை சின்ன சின்ன வார்த்தைகளாக பல வரிகளில் பதிவு செய்து இருந்தார். அவர் டிவிட்டரில்,

நம்பிக்கையின் விஷயங்கள்

சில தருணங்கள்
வரலாற்றில்
விதிக்கப்பட்டுள்ளன
விதை

எதிர்காலம்
நிச்சயமாக
நம்முடைய
நாட்டின் நம்பிக்கை – என பதிவு செய்து இருந்தார்.