‘நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி தான்’ – செங்கோட்டையன் புகழாரம்!

‘நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி தான்’ – செங்கோட்டையன் புகழாரம்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அரியணை ஏறப்போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரில் 2ம் நாளில் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.

‘நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி தான்’ – செங்கோட்டையன் புகழாரம்!

இந்த நிலையில், கூட்டத்தொடரின் 3ம் நாளான இன்று காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் கூடியது. தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கியிருக்கிறது. இதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி பழனிசாமி தான் என புகழாரம் சூட்டினார். பின்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

‘நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி தான்’ – செங்கோட்டையன் புகழாரம்!

ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான பதிலுரையும் நாளையே நடைபெறும். நாளை மறுநாள் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நினைவேற்றப்படும் என்பது நினைவு கூரத்தக்கது.