சிவ சேனாவில் தாவுகிறாரா மத்திய ரயில்வே துறை அமைச்சர்?.. உத்தவ் தாக்கரே கருத்துக்கு சஞ்சய் ரவுத் விளக்கம்

சிவ சேனாவில் தாவுகிறாரா மத்திய ரயில்வே துறை அமைச்சர்?.. உத்தவ் தாக்கரே கருத்துக்கு சஞ்சய் ரவுத் விளக்கம்

பா.ஜ.க.விலிருந்து சிலர் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு வரலாம் என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அவுரங்கபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராசாஹேப் டான்வே எனது முன்னாள் நண்பர், நாங்கள் மீண்டும் ஒன்றாக வந்தால், வருங்கால நண்பர் என்று தெரிவித்தார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராசாஹேப் டான்வேயை வருங்கால நண்பர் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

சிவ சேனாவில் தாவுகிறாரா மத்திய ரயில்வே துறை அமைச்சர்?.. உத்தவ் தாக்கரே கருத்துக்கு சஞ்சய் ரவுத் விளக்கம்
உத்தவ் தாக்கரே

அதாவது மத்திய அமைச்சர் ராசாஹேப் டான்வே சிவ சேனா சேருவார் அல்லது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் சிவ சேனா இணையும் என்று பல கருத்துக்கள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வருங்கால நண்பர் என்ற கருத்து குறித்து சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறியதாவது: முதல்வர் என்ன சொன்னார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க.வில் இருந்து சிலர் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு வரலாம் என்று அவர் சொன்னார். நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம்.

சிவ சேனாவில் தாவுகிறாரா மத்திய ரயில்வே துறை அமைச்சர்?.. உத்தவ் தாக்கரே கருத்துக்கு சஞ்சய் ரவுத் விளக்கம்
ராசாஹேப் டான்வே

மத்திய ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சராக இருக்கும் ராசாஹேப் டான்வேயின் கீழ் வரும் சில ரயில்வே திட்டங்கள் மாநிலத்தில் நிலுவையில் உள்ளன. ராசாஹேப் டான்வே எங்கள் நண்பர் மற்றும் ஒரு மத்திய அமைச்சர், மகாராஷ்டிராவில் நிறைய ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. முதல்வர் அவரை அழைத்தால், அவர் சென்று பேச வேண்டும். மத்திய அரசுடன் நல்ல உறவை வைத்திருப்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.