செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு: உஷார் மக்களே!

 

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு: உஷார் மக்களே!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. கடந்த 25ம் தேதி இரவு புயல் கரையைக் கடந்துமே, மழை தொடர்ந்த வண்ணம் இருந்தது. நிவர் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 25ம் தேதியன்று நண்பகல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு: உஷார் மக்களே!

முதற்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், படிப்படியாக நீர் வெளியேற்றம் 7,000 கன அடியாக உயர்ந்தது. ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள பல வீடுகளில் மழை நீர் புகுந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படப் போவதாக முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தும், அப்பகுதிகளில் நீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு: உஷார் மக்களே!

தற்போது தென் வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் புரெவி புயல் காரணமாக, சென்னையில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கும் இந்த சூழலில், செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாகவும், ஏரியின் நீர்வரத்து 3000 கனஅடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.