இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கு: அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கு: அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் திருமண வேல் உட்பட இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தட்டார்மடம் சம்பவம் :

இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கு: அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற 32 வயது இளைஞர் கடந்த 17 ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேல் செல்வனை கொலை செய்ததாக செல்வன் குடும்பத்தினர் குற்றச்சாட்டியதோடு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை ஏவி, செல்வனுக்கும் அவரது தம்பிக்கும் பொய் வழக்குகள் மூலம் தொல்லை தந்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதை தொடர்ந்து இளைஞர் கொலையில் அதிமுக பிரமுகர் திருமண வேல், முத்து கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

3 நாட்கள் போராட்டம்

இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கு: அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

செல்வன் கொலை வழக்கில் கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என அவரின் உறவினர்கள் சொக்கன் குடியிருப்பில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட செல்வனின் உடலை வாங்க மறுத்ததால் அங்கு பதற்றம் நிலவி வந்தது.

அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு

இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கு: அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் திருமண வேல் இன்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேடப்பட்டு வந்த திருமண வேல், முத்து கிருஷ்ணன் இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் அவர்கள் 3 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.