கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை! திமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன் குற்றச்சாட்டு

 

கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை! திமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன் குற்றச்சாட்டு

செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், “தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்துள்ளோம். எங்களை கட்சியில் இணைத்தற்கு நன்றி. கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை.

கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை! திமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன் குற்றச்சாட்டு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக என்னுடன் அதிக தொண்டர்கள் திமுகவில் இணைய முடியவில்லை. ஆனால் கூடிய விரைவில் பலர் திமுக கட்சியில் இணைய உள்ளனர். தனிப்பட்ட கருத்து வேறுபாடு எதுமில்லை. எங்களை நம்பியுள்ள தொண்டர்களுக்கு நன்மைகளை செய்ய திமுகவில் இணைந்துள்ளோம். அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்” என தெரிவித்தார்.