நீங்க இப்ப ஊர் சுற்றுவதே அம்மா அரசின் பாதுகாப்பில்தான் மிஸ்டர் ஸ்டாலின்: செல்லூர் ராஜூ

 

நீங்க இப்ப ஊர் சுற்றுவதே அம்மா அரசின் பாதுகாப்பில்தான் மிஸ்டர் ஸ்டாலின்: செல்லூர் ராஜூ

கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, கடந்த 21 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , சாதிய தீண்டமையுடன் நடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் எஸ்.சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நீங்க இப்ப ஊர் சுற்றுவதே அம்மா அரசின் பாதுகாப்பில்தான் மிஸ்டர் ஸ்டாலின்: செல்லூர் ராஜூ

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்! இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!” என வலியுறுத்தியிருந்தார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், “2006 மைனாரிட்டி திமுக ஆட்சி காலத்தில்
@mkstalin துணைமுதல்வராக இருந்தபோதிலும் உங்களால் மதுரை மண்ணை மிதிக்க முடிந்ததா? உயிருக்கே பாதுகாப்பற்ற நிலைமை,பின்னர் “நமக்குநாமே” என்று கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை நீங்கள் ஊர் சுற்றியதும்-தற்பொழுது சுற்றுவதும் #அம்மாஅரசு பாதுகாப்பில்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.