“அன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்… இன்று டாஸ்மாக் திறப்பு” – முதல்வரை விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ!

“அன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்… இன்று டாஸ்மாக் திறப்பு” – முதல்வரை விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட 23 வகையான மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ” டாஸ்மாக் கடையைத் திறக்க கூடாது என்று கருப்புச் சட்டை அணிந்து குடும்ப சகிதமாக ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்றைக்கு அவரது ஆட்சியில் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டுள்ளார். இது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்ட முதல்வர் தேனீர் கடையை திறக்க உத்தரவிட வேண்டும்.

“அன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்… இன்று டாஸ்மாக் திறப்பு” – முதல்வரை விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ!

ஏனென்றால் சாமானியர்கள் தான் இந்தக் கடையை நடத்தி வருகின்றனர். அவர்கள் கடை வாடகை கட்ட வேண்டும். அன்றாட வாழ்வாதாரத்திற்காக அவர்கள் உழைக் வேண்டும். டீ கடைகளில் குறைந்தபட்சம் இரண்டு பேர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் குடும்பம் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளை நான் சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். தவறு யார் செய்தாலும் அது ஆண்டவனாக இருந்தாலும் தவறு தவறுதான்.

“அன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்… இன்று டாஸ்மாக் திறப்பு” – முதல்வரை விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ!

இன்றைக்கு கட்டுமானப் பொருட்கள், மளிகைப் பொருள்கள் எல்லாம் கடுமையாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரிடம் ஆலை அதிபர்கள், பெரிய தொழிலதிபர்கள் ஆகியோர் இடத்திலிருந்து நிதி வசூல் செய்து தரப்பட வேண்டுமென்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியில் இது போன்று நிதி தர வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.