பேட்டி அளிக்க மறுத்த செல்லூர் ராஜூ… எச்.ராஜா அழுத்தம் காரணமா?

 

பேட்டி அளிக்க மறுத்த செல்லூர் ராஜூ… எச்.ராஜா அழுத்தம் காரணமா?


தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூவுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மதுரையில் பேட்டி அளிக்க செல்லூர் ராஜூ மறுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல், அடுத்த முதல்வர், கூட்டணி தொடர்பாக பரபரப்பான பேட்டி அளிப்பது அமைச்சர் செல்லூர் ராஜூ வழக்கம். அந்த வகையில் அவர் அளித்திருந்த பேட்டி அடுத்த முதல்வர் யார் என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட காரணமாக இருந்தது.

பேட்டி அளிக்க மறுத்த செல்லூர் ராஜூ… எச்.ராஜா அழுத்தம் காரணமா?


அதன் பிறகு கூட்டணி பற்றி பேசியது பா.ஜ.க-வை சூடுபடுத்தியது. டெல்லிக்கு ராஜா என்றாலும் தமிழகத்தில் பிள்ளைதான் என்று அவர் கூறியது பா.ஜ.க தலைவர்களை கொந்தளிக்க செய்தது. இதைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ பா.ஜ.க பற்றி பேட்டி அளிக்கக் கூடாது என்று எச்.ராஜா வெளிப்படையாக எச்சரிக்கைவிடுத்தார்.
இந்த நிலையில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்ய வந்தார். செல்லூர் ராஜூ ஆய்வு செய்ய வருவதே பேட்டி அளிப்பதற்காகத்தான் என்று மதுரை பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. ஆனால், ஆய்வுக் கூட்டத்தின் போது பேட்டி அளிக்க செல்லூர் ராஜூ மறுத்துவிட்டார். அதற்கு பதில் நிருபர்களுக்கு அறிக்கை ஒன்றை கொடுத்தார்.

பேட்டி அளிக்க மறுத்த செல்லூர் ராஜூ… எச்.ராஜா அழுத்தம் காரணமா?


அது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “நான் கொரோனாவுடன் மக்கள் வாழப்பழக வேண்டும் என்று பேட்டிக் கொடுத்தேன். நீங்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என்று நான் கூறியதாக செய்தி வெளியிட்டீர்கள். அன்றைக்கு கூட முகக் கவசம் அணிந்துதான் ஆய்வு செய்தேன். பேட்டியின் போது மட்டும் தான் முகக் கவசத்தை இறக்கிவிட்டேன். இந்த அறிக்கையில் நான் சொல்ல வேண்டிய விஷயம் உள்ளது. அதையே என் பேட்டியாக போட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறிச் சென்றார். இதனால், பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேறு வேற காரணத்தை வச்சிக்கிட்டு, பத்திரிகையாளர்கள் மீது பழிபோடுவது சரியா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.