“கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது; அப்படி செய்தால் தங்கள் பிள்ளைகளே மதிக்காது”

 

“கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது; அப்படி செய்தால் தங்கள் பிள்ளைகளே மதிக்காது”

நான் மதுரை வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 4 தொகுதியில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தலைமை எந்த தொகுதியை வழங்கினாலும் நிற்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “அதிமுக கட்சியை பொறுத்த வரை ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி , யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.நாளை கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் விரைந்து சென்று விருப்ப மனு பெற்றுகொள்ளலாம். மு.க.ஸ்டாலின் மட்டும் தான் நான் அடுத்த முதல்வர் என கூறுகின்றார். ஆனால் மக்கள் யாரும் அப்படி சொல்லிகொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் முதல்வராக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

“கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது; அப்படி செய்தால் தங்கள் பிள்ளைகளே மதிக்காது”

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த நிலை தற்போது இல்லை, தலைவர்கள் இருந்த போது அவர்களை நம்பி வாக்களித்தனர். ஆனால் அந்தநிலை தற்போது இல்லை , நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை மனதில் வைத்து நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நான் என் தொகுதியை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றவில்லை , நான்கு தொகுதிகளுக்கும் சிறப்பான திட்டங்களை செய்தேன். நமது கட்சிக்கு யாரும் துரோகம் செய்ய கூடாது , அப்படி செய்தால் நீங்கள் துரோகி ஆகிவிடுர்கள் உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது” எனக் கூறினார்