திமுகவினர் பித்தலாட்ட அரசியல் செய்கின்றனர்! திமுகவில் மன்னர் பரம்பரை- அமைச்சர் செல்லூர் ராஜூ

 

திமுகவினர் பித்தலாட்ட அரசியல் செய்கின்றனர்! திமுகவில் மன்னர் பரம்பரை- அமைச்சர் செல்லூர் ராஜூ

நீட் அச்சத்தால் உயிரிழந்த மதுரை ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தகவல்தொழில் நுட்ப அணியினர் மெளன அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “நீட் மோசமானது என்பதை உணர்ந்ததால் தான் அன்றே ஜெயலலிதா நீட்டை எதிர்த்தார். கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசுக்கு மாற்றினால் பாதிப்பு ஏற்படும் என நீட்டை எதிர்த்த ஒரே தலைவர் ஜெயலலிதா. திமுக அன்றே நினைத்திருந்தால் கல்வியை மாநிலப்பட்டியயில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றாமல் இருந்தவர்கள் திமுக. ஆனால் தற்போது நீட்டால் தற்கொலை செய்த கொண்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார் உதயநிதி. பித்தலாட்ட அரசியலை திமுகவினர் செய்கின்றனர். திமுகவினர் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். காவிரி, நீட் என மொத்தத்தையும் செய்துவிட்டு ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது.

திமுகவினர் பித்தலாட்ட அரசியல் செய்கின்றனர்! திமுகவில் மன்னர் பரம்பரை- அமைச்சர் செல்லூர் ராஜூ

கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்தது அதிமுக தகவல்தொழில் நுட்ப துறை. அதிமுக என்பது ஆலமரம். ஆலமரத்தில் 17 அணிகள் உள்ளன. அணிகள் பக்க பலமாக இருந்தால் தான் கட்சி வளரும். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கவில்லை. மக்கள் தான் அவரை கட்சி தொடங்க சொன்னார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்தி மக்கள் எம்ஜிஆரை கட்சி தொடங்க சொன்னார்கள். எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்துள்ளனர். நலத்திட்டங்களை வழங்கியுள்ளனர். இக்காலத்தில் கூட கூகுளில் அதிகம் தேடுகிற தலைவராக எம்ஜிஆர் உள்ளார். தொண்டர்களை நம்பித்தான் இயக்கம். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்கள் இருந்தால் தான் கட்சி. திமுகவில் அப்பா, மகன், அப்பாவின் மகன், மகனின் மகன் என குடும்ப கட்சியாக உள்ளது. என்னைத்தவிர என் குடும்பம் கட்சிக்குள் வராது என சொன்னார் ஸ்டாலின். திமுகவில் மன்னர் பரம்பரை ஒழியவில்லை. விசுவாசமாக இருந்தால் அதிமுகவில் பதவி தேடி வரும். எங்களின் ஒரே நோக்கம் எதிரியை வீழ்த்துவது ஆறுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோல அதிமுகவுக்கு ஒபிஎஸ் ஈபிஎஸ் முக்கியம். கண்ணுக்கு இரு இமை எப்படி முக்கியமோ அதுபோல கட்சிக்கு ஒபிஎஸ் ஈபிஎஸ் முக்கியம்” எனக் கூறினார்.