5 ஆண்டுகளில் பணி நிரந்தரம்… தமிழக அரசு அதிரடி

 

5 ஆண்டுகளில் பணி நிரந்தரம்… தமிழக அரசு அதிரடி

கோவில்களில் கடந்த 5 ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்றுவருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் பணி நிரந்தரம்… தமிழக அரசு அதிரடி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆட்சி காலத்தில் 3500 கோடி ரூபாய் மதிப்புள்ள 8700 கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வாறு உண்மையிலேயே மீட்கப்பட்டு இருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு பல கோவில் நிலங்களை மீட்க பட்டிருந்தால் சிவகங்கையில் உள்ள கௌரி விநாயகர் கோவில் நிலத்தின் 10 ஏக்கர் அமைச்சரின் கட்டுப்பாட்டிலிருந்து ஏன் மீட்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.

தற்போது திமுக ஆட்சியில் கோவில் நிலங்களை மீட்கும் பணியானது முன்கூட்டியே அறிவித்து நடைபெற்று வருகிறது. கடந்த 55 நாட்களில்
79.5 ஏக்கர் கோவில்களுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 520 கோடி. கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்கள் தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கோவில் இடங்களில் வசிப்பவர்களில் விவரங்களும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்ட பேரவையில் வெளியிட்ட அறிக்கையில் 40000 நபர்களுக்கு அறநிலையத்துறையில் பணி வழங்குவதற்கான விவரங்களை திரட்டி வருகிறோம்” என தெரிவித்தார்.