இலங்கைக்கு கடந்தமுயன்ற ஊட்டச்சத்து ஊசி, மருந்துகள் பறிமுதல்

 

இலங்கைக்கு கடந்தமுயன்ற ஊட்டச்சத்து ஊசி, மருந்துகள் பறிமுதல்

ராமநாதபுரம்

ராமமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்த இருப்பதாக, மண்டபம் இந்திய கடலோர காவல்படை முகாமுக்கு, ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு கடந்தமுயன்ற ஊட்டச்சத்து ஊசி, மருந்துகள் பறிமுதல்

இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கடற்கரை முழுவதும் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், கருவேல மரத்திற்கு அடியில் பாலிதீன் கவர்களால் சுருட்டி வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றை பறிமுதல் செய்தனர்.அதனை பிரித்து பார்த்தபோது ஊட்டச்சத்து ஊசி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதில் சுமார் 2 மி.லி அளவுள்ள சுமார் 6000 ஊசி, மருந்து பாட்டில்கள் இருந்தன.

இலங்கைக்கு கடந்தமுயன்ற ஊட்டச்சத்து ஊசி, மருந்துகள் பறிமுதல்

தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால், ஊட்டச்சத்தாக ஊசி மருந்துகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ள கடலோர காவல்படையினர்,
இதன் இலங்கையின் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஊசி மருந்துகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.