பறிமுதல் செய்த வாகனங்களின் பாகங்கள் திருட்டு- காவல் ஆய்வாளர், எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

 

பறிமுதல் செய்த வாகனங்களின் பாகங்கள் திருட்டு- காவல் ஆய்வாளர், எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி

திருச்சி அருகே காவல் நிலையத்தில் பறிமுதல் செய்துவைத்திருந்த இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ளது வாத்தலை காவல் நிலையம். இங்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான இருசக்க வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவற்றில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த டயர், வீல் உள்ளிட்ட பல்வேறு உதரி பாகங்களை அதே பகுதியை சேர்ந்த ரஜினி மற்றும் முருகன் உள்ளிட்டோர் திருடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்த வாகனங்களின் பாகங்கள் திருட்டு- காவல் ஆய்வாளர், எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

இதுகுறித்து அறிந்த வாத்தலை காவல் நிலைய போலீசார் கொள்ளையர்களை கைதுசெய்ய முயன்ற நிலையில், அவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்கொண்ட விசாரணையில், பணியில் அலட்சியமாக இருந்து, கொள்ளையர்களை தப்பிவிட்டது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் செல்லப்பா ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.