தடைசெய்த குவாரியில் கருங்கல் ஏற்றிய வாகனம் பறிமுதல் – வருவாய் துறையினர் அதிரடி

 

தடைசெய்த குவாரியில் கருங்கல் ஏற்றிய வாகனம் பறிமுதல் – வருவாய் துறையினர் அதிரடி

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே தடைசெய்த கல்குவாரியில் இருந்து கருங்கற்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கியம்
பகுதியில் நகராஜ் என்பருக்கு சொந்தமான கல்குவாரி, கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. குவாரியினால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாகவும், குவாரியில் வைக்கப்படும் வெடிகளினால் வீடுகளில் விரிசல் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்துவந்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குவாரியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், விதிகளை பின்பற்றாததால் அதன் உரிமத்தை ரத்துசெய்து, கல்குவாரி செயல்பட தடை விதித்து உத்தரவிட்டார்.

தடைசெய்த குவாரியில் கருங்கல் ஏற்றிய வாகனம் பறிமுதல் – வருவாய் துறையினர் அதிரடி

இந்த நிலையில், சிலர் கல்குவாரியில் இருந்து மினி டிப்பர் லாரி மூலம் கருங்கற்கள் வெட்டியெடுத்து, லோடு செய்வதை கண்ட அந்த பகுதி மக்கள் வாகனத்தை துரத்திச்சென்று பிடித்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலிங்கியம் வருவாய் ஆய்வாளர், குவாரியிலிருந்து அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கோபி வட்டாட்சியர் அலவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் பிரபு மற்றும் குவாரி உரிமையாளர் நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.