வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ளது பச்சூா் நல்லகிந்தனப்பள்ளி கிராமம். இந்த பகுதியில் சிலா் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, ஆந்திராவுக்கு கடத்திச் செல்வதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாட்றம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், பகுதியில் உள்ள இளையராஜா என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது, 57 பிளாஸ்டிக் கோணிப்பைகளில் முறைகேடகா பதுக்கி வைத்திருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இளையராஜாவிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து ஆந்திரத்துக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள், திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.