கேரளாவுக்கு கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

கேரளாவுக்கு கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம் அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அடுத்த வல்லநாடு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முரப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக பாரம் ஏற்றிச்சென்ற லாரியை மறித்து சோதனை மோற்கொண்டனர்.

கேரளாவுக்கு கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சோதனையில் லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மறைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 10 டன் அளவிலான ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உணவு பொருட்கள் வழங்கல் துறை அதகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.