இந்து சமய அறநிலைய துறையிடம் சென்ற தனியார் பள்ளி!

 

இந்து சமய அறநிலைய துறையிடம் சென்ற தனியார் பள்ளி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளியை இனி இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலைய துறையிடம் சென்ற தனியார் பள்ளி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த பள்ளி நிலத்தின் குத்தகை காலம் நிறைவடைந்தது. மேற்கொண்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் பள்ளியை இழுத்து மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இறுதியில் அறநிலையத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்டனர். அதனை விசாரித்த அறநிலையத்துறை இன்று பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தனியார் பள்ளி இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வந்தது. தொடர்ந்து வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் இழுத்து மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இனி இந்த பள்ளியை இந்து சமய அறநிலையத் துறையை ஏற்று நடத்தும். இதற்கு முன்பு பள்ளியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணமே வசூலிக்கப்படும். கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது” என தெரிவித்துள்ளார்.