சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 தானா? வேட்புமனுவில் நடந்த குளறுபடி!

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 தானா? வேட்புமனுவில் நடந்த குளறுபடி!

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் திருத்தப்பட்ட புதிய பிராமணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 தானா? வேட்புமனுவில் நடந்த குளறுபடி!

நாம் தமிழர் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில்,சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை கிளப்பியது.

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 தானா? வேட்புமனுவில் நடந்த குளறுபடி!

இதையடுத்து சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அதற்கான அவர் செலுத்திய வரி தொகை ரூ.1,000 என்பது தான் தவறாக பதிவிடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பிராமணப் பத்திரத்தை திருவொற்றியூரில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அளிக்கவுள்ளனர். சீமானின் அசையும் சொத்து மதிப்பு ரூ.94.31 லட்சம் , அசையா சொத்து ரூ.87.30 லட்சமாகும். அத்துடன் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.81 கோடியாகும்.