‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

 

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பேனர்ஜியின் கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஒரே நாடு! ஒரே தலைவர் எனும் முழக்கம் ஏற்புடையதல்ல; எல்லாவற்றிற்கும் எதற்கு டெல்லியைச் சார்ந்திருக்க வேண்டும்? தலைநகரங்களைப் பரவலாக்க வேண்டும். அதற்கு இந்திய நாட்டிற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியிருப்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த கருத்தாகும். அதனை வரவேற்று முழுமையாக ஏற்கிறேன்.

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

தலைநகரங்களைப் பரவலாக்குவதன் மூலமே வளர்ச்சியைக் கடைக்கோடி வரை கொண்டு செல்ல முடியும் என்பதையுணர்ந்தே, தமிழ்நாட்டில் ஐந்து மாநிலத் தலைநகரங்கள் இருக்க வேண்டும் எனும் முழக்கத்தை முன்வைக்கிறோம். அதேபோல, இந்தியாவிற்கும் நான்கு தலைநகரங்கள் வேண்டும் எனும் சகோதரி மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிந்து, அத்தோடு நான்கு தலைநகரங்களில் ஒரு தலைநகரம், தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் எனும் எமது கோரிக்கையையும் இணைத்து அதனையும் முன்வைக்கிறேன்.

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

அதிகாரப் பரவலாக்கலும், மாநிலங்களின் தன்னாட்சியுரிமையுமே நாட்டின் ஒருமைப்பாட்டையும், தேசிய இனங்களிடையே சமத்துவத்தையும் தக்கவைத்து, நாட்டின் இறையாண்மையைக் காக்கத் துணைநிற்கும் என்பதையுணர்ந்து, சகோதரி மம்தா பானர்ஜியின் இக்கருத்துக்குத் வலுசேர்க்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனங்களின் தலையாயக் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நமது நாட்டுக்கு ஒரு தலைநகரம் எதற்கு? வடக்கு, தெற்கு கிழக்க, மேற்கு ஆகிய 4 திசைகளிலும் ஒவ்வொரு தலைநகரங்கள் இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தலைவர் என்ற கொள்கை எல்லாம் சரிபடாது. ஏன்? டெல்லியிலேயே எல்லா தகவல்களும் முடங்க வேண்டும். 4 திசையிலும் தலைநகரம் இருந்தால் சுழற்சி முறையில் பயன்படுத்தலாமே?’ என்று கொல்கத்தா நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.