தமிழரா? திராவிடரா? ஸ்டாலினை ஒரு கை பார்ப்பேன் என கூறிவிட்டு பின்வாங்கிய சீமான்!

 

தமிழரா? திராவிடரா? ஸ்டாலினை ஒரு கை பார்ப்பேன் என கூறிவிட்டு பின்வாங்கிய சீமான்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்து வேட்பாளர்களையும் இன்று அறிமுகம் செய்துள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற வேட்பாளர்கள் அறிவிப்பு விழா மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் அமர்ந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், முதலில் 2016 ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் களம்கண்டார். இதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கினார்.

தமிழரா? திராவிடரா? ஸ்டாலினை ஒரு கை பார்ப்பேன் என கூறிவிட்டு பின்வாங்கிய சீமான்!

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நான் அங்கு களம்காண்கிறேன். திருவொற்றியூரில் தான் இடம் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழரா? திராவிடரா? என ஒரு கை பார்த்துடுவோம் என சீமான் சவால் விட்டிருந்தார். இதனால் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான், “கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களை காப்பதுதான் இலக்கு. அதனால் திருவொற்றியில் போட்டியிடுகிறேன்” எனக் கூறினார்.