• April
    03
    Friday

Main Area

Main



கோலம் போட்டவர்களை கைது செய்த அரசு!! அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம்! - சீமான் நக்கல்

seeman
seeman

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சி அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். அதனொரு பகுதியாக சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சில பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து கோலம் போட்டவர்களை கைது செய்த காவல்துறையினர், சிலமணி நேரங்களுக்கு பின் விடுவித்தனர். 

 

 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “கொலை செய்தவர்களையும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட கொடுங்கோலர்களையும் விட்டுவிட்டு கோலமிட்டவர்களைக் கைது செய்துள்ளது அரசு! அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம்!” என பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.