கிருபானந்தா வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா… முதல்வருக்கு சீமான் நன்றி!

 

கிருபானந்தா வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா… முதல்வருக்கு சீமான் நன்றி!

முருக பக்தரும் ஆகச்சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். அவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி பிறந்தார். கடவுள்களில் ஒருவரான முருகன் மீது தீராத பற்று கொண்டிருந்ததால் அவரை அனைவரும் திருமுருக கிருபானந்த வாரியார் என செல்லமாக அழைத்தனர்.

கிருபானந்தா வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா… முதல்வருக்கு சீமான் நன்றி!

ஆன்மிக சொற்பொழிவால் அனைவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியதால் அவர் சொல்லின் செல்வர் என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். பிறந்தது முதலே தொண்டாற்றிய அவர் 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு புகழ் சேர்க்கும் விதமாக முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

கிருபானந்தா வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா… முதல்வருக்கு சீமான் நன்றி!

இச்சூழலில், வேலூர் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, கிருபானந்தா வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு ஆன்மிகவாதிகள் பலரும் நன்றி தெரிவித்தனர். தற்போது மற்றொரு முருக பக்தராக அறியப்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “போற்றுதற்குரியப் பெருந்தகை ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதையறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.