இதுதான் சான்ஸ்…. பேரறிவாளனை உடனடியாக ரிலீஸ் பண்ணிடுங்க! தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

 

இதுதான் சான்ஸ்…. பேரறிவாளனை உடனடியாக ரிலீஸ் பண்ணிடுங்க! தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாக பயன்படுத்தி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி, “எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்த பிறகும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தியினைத் தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

இதுதான் சான்ஸ்…. பேரறிவாளனை உடனடியாக ரிலீஸ் பண்ணிடுங்க! தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களும், எல்லாத்தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்துக் குரலெழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார். இந்நேரத்தில் அப்பா குயில்தாசன் அவர்களது உடல்நலம் மிகவும் குன்றியிருக்கிற சூழலில் அவர்களுக்கு உற்றத் துணையாய், உளவியல் பலமாய் தம்பி பேரறிவாளன் உடன்நிற்க வேண்டியது பேரவசியமாகிறது. மேலும், தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றமே அவரின் 161 மனு நிலுவையில் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில் அவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவது தமிழக அரசின் முழுமுதற் கடமையாகும். ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது தம்பி பேரறிவாளனையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.