“உலகின் புகழ்பெற்ற கடற்கரையை திராவிடக் கட்சிகள் இடுக்காடாகவும் சுடுக்காடாகவும் மாற்றி விட்டன ” – சீமான்

 

“உலகின் புகழ்பெற்ற கடற்கரையை திராவிடக் கட்சிகள் இடுக்காடாகவும் சுடுக்காடாகவும் மாற்றி விட்டன ” – சீமான்

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் நாம் தமிழர் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். அதன்படி 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளேன். அதற்கு முன் கட்சியினரை ஊக்கப்படுத்த இந்த பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்திய கட்சிகள், திராவிடக்கட்சிகளை நாங்கள் தான் வழி நடத்தி வருகிறோம். முதலில் சுற்றுச்சூழலுக்கு என்று பாசறை துவக்கியது நாங்கள் தான். நாங்கள், 10 ஆண்டுகள் பணி செய்த பிறகு திமுக, தினகரன் ஆகியோர் துவக்குகின்றனர். இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு மேய்ப்பது தொடர்பாக பேசியபோது கேலி செய்தார்கள்.

“உலகின் புகழ்பெற்ற கடற்கரையை திராவிடக் கட்சிகள் இடுக்காடாகவும் சுடுக்காடாகவும் மாற்றி விட்டன ” – சீமான்

கர்நாடக காவல்துறை அதிகாரி பதவி விலகி, இங்கு வந்து ஆட்டுக்குட்டியை தோலில் போட்டுக்கொண்டு, இயற்கை வேளாண்மை செய்யனும், ஆடு, மாடு வளர்க்க வேண்டும் என்கிறார். அதே மாதிரி வேலை எடுத்து முருகன் நம் முப்பாட்டனார் என சொன்னபோது கேலி, கிண்டல் செய்தார்கள், சீமானின் நிறம் பச்சை என எழுதியதை பார்த்தீர்கள். நான் ஆத்மார்த்தமாக நேசித்து உணர்வு பூர்வமாக செய்கிறேன், அவர்கள் அனைத்தையும் ஓட்டுக்காக தான் செய்கின்றனர். நாங்கள் தான் இவர்களுக்கு வழிகாட்டி. ராகுல்காந்தி வருகையை வருகை ஆக தான் பார்க்கிறேன். காங்கிரஸ் நாடு முழுவதும் வீழ்ந்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் தான் அவர்களுக்கு எம்.பி. உள்ளனர். அதனால் தான் இந்த நிலத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். ஏன் ராகுல்காந்தியே தோற்றுவிட்டார். கேரளாவில் வென்றார். தென் மாநிலங்களிலாவது காங்கிரஸின் பலத்தை தக்க வைக்க பார்க்கிறார்.

மீனவர் படுகொலைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு மீனவர் கூட கொலை செய்யப்படவில்லை என பேசிக்கொள்ளும் மத்திய ஆட்சியில் தான் தற்போது 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு வாய் திறப்பதில்லை. வட இந்தியாவில் ஒரு மீனவர் உயிரிழந்ததால் இந்நேரம் போர்ப்பதற்றத்தை ராணுவத்தை குவித்திருப்பார்கள். அவர்கள் எங்கள் மரணத்தையும், ரத்ததையும் ருசிக்க பழகிவிட்டனர். டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதல் கொடுங்கோல் நோக்கி ஆட்சி செல்லப்படுகிறதோ என எண்ண தோன்றுகிறது. டெல்லி போராட்டம் ஒட்டுமொத்த குடிகளுக்கான போராட்டம். விவசாயிகள் பிரச்னை என்றில்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சினையாக பார்க்கலாம்.

22 ஆண்டுகளாக திமுக ஆண்டுள்ளது. 22 ஆண்டுகளாக தீர்க்காத பிரச்சினையை 100 நாட்களில் தீர்க்கப்படும் என்பது நகைச்சுவை தான். மக்களுக்கான பிரச்சினையே திமுக தான். இவர்கள் தோற்றுவிட்டாலே மக்களுக்கு பிரச்சினை இல்லை.
நீங்கள் வருவது தான் பிரச்சினை என மக்கள் சொல்லும்போது வருவேன் என்றால் எப்படி? கருத்தியல் புரட்சி தான். எங்கள் நாட்டை உலக அளவில் தலை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கனவு. அந்த திட்டத்தை சொல்வோம். நாங்கள் வந்துவிட்டால் ஒரு மீனவரை கூட தொட முடியாது. தொட்டுவிட்டால், நான் பதவி விலகிடுவேன். என் பிள்ளைகள் செத்து கரை ஒதுங்கியதை போல அவர்களும் ஒதுங்குவார்கள். 845 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டும் மத்திய அரசு ஒன்றுமே பேசவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்தபோது, ஆளுநர் காத்திருக்க சொல்வதாக கூறி வருத்தப்பட்டார். ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் நம் பிள்ளைகளின் விடுதலை உறங்கி கிடக்கிறது. உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்துவதை புரிந்துக்கொண்டு ஆளுநர் 7 பேர் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும். உலகின் புகழ்பெற்ற கடற்கரையை திராவிட கட்சிகள் இடுக்காடாகவும், சுடுக்காடாகவும் மாற்றுகின்றனர். எதற்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, அனைவருக்கும் சமாதி. ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார். அவர்கள் கட்சி, ஆட்சியில் உள்ளது செலவு செய்கிறார்கள், நினைவிடம் திறக்கிறார்கள். மார்ச் 20 ல் நான் எங்கே போட்டியிட உள்ளேன் என்பதை அறிவிப்பேன்” எனக் கூறினார்.