ஸ்டாலின் வீட்டுக்கு மட்டும்தான் போவிங்களா? என் வீட்டுக்கும் வாங்க! ஐடி ரெய்டை அழைக்கும் சீமான்

 

ஸ்டாலின் வீட்டுக்கு மட்டும்தான் போவிங்களா? என் வீட்டுக்கும் வாங்க! ஐடி ரெய்டை அழைக்கும் சீமான்

தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர். நேற்று கூட திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகள் வீட்டில் 12 மணிநேரமாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் வீட்டுக்கு மட்டும்தான் போவிங்களா? என் வீட்டுக்கும் வாங்க! ஐடி ரெய்டை அழைக்கும் சீமான்

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது வீட்டு முகவரியைக் கொடுத்து முடிந்தால் அங்கு வந்து சோதனை செய்யுமாறு வருமான வரித்துறையினருக்கு அழைப்பு விடுத்து பிரச்சாரத்தில் பேசினார். இந்நிலையில் சீமானும் வருமானவரித்துறை என் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசிய சீமான், “தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த அமைப்புகளை பிரதமர் மோடி ஐந்து வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். அதை வைத்து மிரட்டி வருகிறார். அச்சுறுத்த கடைசி ஆயுதமாக வருமான வரித்துறை சோதனை பயன்படுத்துகின்றனர். ஏன் என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.