நான் ஓட்டுக்கான மகன் அல்ல..இந்த நாட்டுக்கான மகன்: சீமான் அதிரடி

 

நான் ஓட்டுக்கான மகன் அல்ல..இந்த நாட்டுக்கான மகன்: சீமான் அதிரடி

திருவொற்றியூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “எதற்கு 1000, 1500 ரூபாய் தருவதாக கூறுகிறீர்கள்? தனிநபர் வருமானத்தை உயர்த்த வழி செய்யுங்கள். ஆடு மாடுகளை வளர்ப்பது அவமானமல்ல. வெகுமானம். மாதம் எதற்கு குடும்ப தலைவிகளுக்கு காசு? அந்த காசு எங்கிருந்து வரும்? மறுபடியும் கவர்ச்சி திட்டங்களை சொல்லி சொல்லி பிச்சைக்காரர்களாக்குகின்றனர். இதுவரை பேசாத பொருளாதாரம், கல்வி, வேளாண்மை பற்றி ஏன் பேசுகிறீர்கள். நான் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை அதனால் பேசுகிறேன். நீங்கள் ஏன் 10 ஆண்டுகளாக இதனை பற்றி பேசவில்லை. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவர்கள் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பர். மாற்றத்திற்கான அரசியல் வேண்டுமென சொல்கின்றனர். இங்கு நடப்பது ஆள் மாற்றம் மட்டுமே, ஆட்சி மாற்றம் இல்லை.

நான் ஓட்டுக்கான மகன் அல்ல..இந்த நாட்டுக்கான மகன்: சீமான் அதிரடி

திமுக, அதிமுக இடையே ஒரு கொள்கையிலும் மாற்றமில்லை. இரண்டு கட்சிகளிலும் கொள்ளை, ஊழல், இருட்டு, லஞ்சம், மணல் கொள்ளை, டாஸ்மாக் உள்ளிட்டவற்றில் ஒற்றுமை. கட்சிதான் வேறு. கொள்கை இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றுதான். காங்கிரஸ் – பாஜக இடையிலும் கொள்கை மாறவில்லை. இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுக்கு நேர் மாற்றாக நாம் தமிழர் கட்சி இல்லை. தரமான கல்வியை நான் கொடுப்பேன். ஸ்டாலினால் கொடுக்க முடியுமா? நான் டாஸ்மாக்கை மூடிவிட்டு கல்லுக்கடையை திறக்க உத்தரவிடுவேன். ஆனால் டாஸ்மாக் ஆலையை வைத்திருக்கும் ஸ்டாலினால் முடியுமா? நான் ஓட்டுக்கான மகன் அல்ல..இந்த நாட்டுக்கான மகன்” என பேசினார்.