அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்- சீமான்

 

அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்- சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என படுபிஸியாக உள்ளது. இந்நிலையில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று ஒய்எம்சி மைதானத்தில் நடைபெற்றது.

அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்- சீமான்

இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆதி மனிதனும் தமிழன்தான், ஆதி மொழியும் தமிழ்தான், தமிழ் எங்கள் முகவரி, தமிழ் எங்கள் தாய், தமிழ் எங்கள் அடையாளம், நாங்கள் உறுதியாக வெல்வோம். வேளாண் தொழிலை செய்ய படித்தவர்கள் முன்வர வேண்டும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண்மை அரசுப் பணியாக மாற்றப்படும். தமிழ் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் கட்டாய பாடமொழி, உலகின் எம்மொழியும் எங்கள் விருப்ப மொழி. அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றிவிட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றிவிட்டனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை

அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை” எனக் கூறினார்.