சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

 

சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

சசிகலா உடல் நலம் பெற்று வெளியே வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டல தேர்தல் கலந்தாய்வு வேட்பாளர் அறிமுகம் கூட்டம் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சென்னையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும். அப்போது 117 பெண் வேட்பாளர்களும் 117 ஆண் வேட்பாளர்களும் என 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் தற்பொழுது தஞ்சையில் நடைபெறுவது தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம். சோழ மண்டலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமர வைக்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

இலங்கை கடற்படை இதுவரை 840 மீனவர்களை கொன்றிருக்கிறார்கள். தற்போது புதுக்கோட்டையை சேர்ந்த நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை எனக் கூறிவரும் மத்திய அரசு இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறது? வெளியுறவுத் துறைக்கும் ராணுவத்துறையும் இதுப்பற்றி வாய் திறக்கவில்லை. நட்பு நாடு என தெரிவிக்கும் ஒரு சின்ன நாடான இலங்கை எத்தனை தமிழக மீனவர்களை கொன்று குவித்துள்ளது.

கேரள மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றபோது இத்தாலி வீரர்களை உடனடியாக கைது செய்த கேரள அரசு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ஒரு கோடி வழங்கியது. அது போன்ற அரசியல் சூழல் தமிழகத்தில் இல்லை. சசிகலா உடல் நலம் பெற்று வெளியே வர எனது வாழ்த்துக்கள். நான்கு ஆண்டுகளாக சிறையிலிருந்த சசிகலா நான்கு நாட்களில் வெளியே வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்வதில் வேறு மாதிரியாக யோசிக்க தோன்றுகிறது” எனக் கூறினார்.