• March
    30
    Monday

Main Area

Main



விஜய்யை அரசியலுக்கு வராமல் தட்டிவைக்கவே வருமான வரி சோதனை- சீமான்

சீமான்
சீமான்

இயக்குநர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னில் சென்னை ஆழ்வார் திருநகரில் நூலகம் ஒன்றை இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார்.  அந்த விழாவில் இயக்குனர்கள் வெற்றி மாறன், ராம், சீனு ராமசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், புத்தகத்தை தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அது ஆயுதம். பாலு மகேந்திராவிற்கு புத்தகம் மீது தீரா பற்று கொண்டவர். அவரது பிள்ளைகள் இதை விட சிறந்த விஷயத்தை இந்த சமூகத்திற்கு கொடுக்க முடியாது.

சீமான்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் நோக்கமே அவரை அரசியலுக்கு வராமல் தட்டிவைப்பதற்கான முயற்சி தான். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வரும். அதற்காகதான் உழைத்துக்கொண்டிருக்கிறோம். டெல்லியை போல ஒரு அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்” எனக் கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.