Home அரசியல் உண்மையிலேயே ரசிகர்கள் என்றால் ரஜினியை ஓய்வெடுக்கவிட வேண்டும்- சீமான்

உண்மையிலேயே ரசிகர்கள் என்றால் ரஜினியை ஓய்வெடுக்கவிட வேண்டும்- சீமான்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் சார்பாக கட்சி அலுவகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு இருக்கிறார்.

உண்மையிலேயே ரசிகர்கள் என்றால் ரஜினியை ஓய்வெடுக்கவிட வேண்டும்- சீமான்

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, “நாம் தமிழர் கட்சியை அரசியல் இயக்கமாக தொடங்கப்பட்ட நாளிலிருந்து தமிழர் திருநாளை பெரும் விழாவாக கொண்டாடிவருகிறோம். ஜாதி,மதம்,பசி பஞ்சம், ஊழல்,கொள்ளை, இதற்கு எதிராக இந்த பொங்கலை கொண்டாடுவோம். பலர் பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு வராமல் தற்போது வருவது தேர்தலுக்காக மட்டுமே. விரும்பியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று கொண்டு வந்தால் சாரி. தடுப்பூசி முதல்கட்டமாக முதல்வர் மற்றும் மோடி போடட்டும் அதன் பிறகு மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரட்டும். அதானி, அம்பானி இருவரின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

உண்மையிலேயே ரசிகர்கள் என்றால் ரஜினியை ஓய்வெடுக்கவிட வேண்டும்- சீமான்

படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு என்றால் மோடி, அமித்ஷா, அரசியலில் போட்டியிடும் அரசியல் வாதிகள், அமைச்சரவையை நிர்வாகியாக வேண்டும் என்று நினைத்தால் அரசியல், சமூகம், பொருளாதாரம், புவியியல் உள்ளிட்டவற்றில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். அப்படி என்றால் நானும் எழுதுகிறேன். வன்னியர்கள் இட ஒதுக்கீடு கேட்டது வரவேற்கதக்காது. சிம்பு, விஜய் இருவருமே எனது தம்பிகள். சிம்பு படம் வெளி வரக்கூடாது என்று விஜய் நினைக்க மாட்டார். வினியோகஸ்தர்கள் விஜய் படத்தை முதலில் வெளியிட்டு வசூல் செய்தபின், சிம்பு படத்தை வெளியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் உண்மையிலேயே அவரை நேசிப்பவர்களாக இருந்தால் நிம்மதியாக அவரை ஒய்வு எடுக்க விட வேண்டும். இன்னும் அவர் நிறைய படம் நடிக்க வேண்டும். அவரது படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள். தலைவன் என்பவன் மக்களை பற்றி சிந்திப்பான் அரசியல்வாதி தேர்தலை பற்றி மட்டுமே தான் சிந்திப்பான்.எனக்கு இரண்டு திராவிட கட்சிகளும் சம அளவு எதிரியாகும். பிஜேபி – காங்கிரஸ் இரண்டுக்கும் Party change policy change இல்லை” எனக் கூறினார்.

உண்மையிலேயே ரசிகர்கள் என்றால் ரஜினியை ஓய்வெடுக்கவிட வேண்டும்- சீமான்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல்...
- Advertisment -
TopTamilNews