ரஜினி அரசியலுக்கு வருவது மக்களுக்கு தேவையில்லை ஆனால் பாஜகவுக்கு தேவை- சீமான்

 

ரஜினி அரசியலுக்கு வருவது மக்களுக்கு தேவையில்லை ஆனால் பாஜகவுக்கு தேவை- சீமான்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி அரசியலுக்கு வருவது மக்களுக்கு தேவையில்லை ஆனால் பாஜகவுக்கு தேவை- சீமான்

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் வழிநடத்த அவரது ரசிகர் மன்றத்தில் தகுதியான ஆள் ஒருவர் கூட இல்லையா? அழுத்தத்தின் காரணமாக ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து விலகிவந்த தமிழருவி மணியனும் பாரதிய ஜனதாவில் அறிவுசார் பிரிவு அர்ஜூன மூர்த்தியும் ரஜினியின் கட்சியை வழிநடத்தவுள்ளனர். பாஜகவில் இருந்த அர்ஜூன மூர்த்தியை தீவிர இந்துத்துவாவாதி, ஆர்எஸ்எஸ்- இல் இருந்தவர். அவரை வைத்துக்கொண்டு சாதி, மதசார்பற்ற அரசியலை எவ்வாறு ரஜினி முன்னெடுப்பார். ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவார், பிப்ரவரியில் தேர்தலை சந்திப்பார், மார்ச்சியில் முதலமைச்சர் ஆகிவிடுவாரோ?

அழுத்தத்தின் காரணமாக ரஜினி கட்சி தொடங்க உள்ளார். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ரஜினி அரசியலுக்கு வருவது தேவையே இல்லை. கணக்காளர் குருமூர்த்திக்கும் பாஜகவுக்குமே ரஜினி தேவைப்படுகிறார்” எனக் கூறினார்.