2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி, நானும் போட்டியிடுவேன்: சீமான்

 

2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி, நானும் போட்டியிடுவேன்: சீமான்

சென்னையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இந்து, இந்தி, இந்தியா இதனை கட்டமைப்பது தான் பாஜகவின் நோக்கம். அந்திவந்தால் நிலவுவரும், இந்தி வந்தால் பிளவு வரும். இந்தி சமஸ்ருதத்தை படிக்க சொல்பவர்கள், தமிழை படிக்க சொல்ல மறுப்பது ஏன்? வரலாற்றை இழந்த இனமும், வேரை இழந்த மரமும் வாழாது. செத்துப்போன சமஸ்கிருத்தைதை உயிர்ப்பிக்க துடிக்கிறார்கள். நாம், செத்து கொண்டிருக்கும் தமிழை உயிரூட்ட நினைக்கிறோம்.

2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி, நானும் போட்டியிடுவேன்: சீமான்
400 ஆண்டுகள் தொடாத இந்தியை நாடு முழுவதும் பரப்ப நினைப்பது தவறு. இந்தியாவின் பொருளாதாரத்தை நிரப்பும் மாநிலங்களில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. தேர்வு படிப்பின் மீது மாணவர்களுக்கு ஏற்படும் வெறுப்பை உண்டாக்கும். புதிய கல்வி கொள்கையை நாங்கள் காரி உமிழ்கிறோம். இந்தி படி என்று எவனெவன் பேசுபவனோ அவன் பிரிவினைவாதி. இந்த கல்வி கொள்கையை முற்றிலும் எதிர்க்கிறோம். கல்வி மாணவர்களை தேடி போக வேண்டும். கல்வியை தாரை வார்க்ககூடாது. புதிய கல்வி கொள்கையை முற்றிலும் எதிர்கிறோம், சீர்திருத்தம் தேவையில்லை. 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி, நானும் போட்டியிடுவேன்” எனக் கூறினார்.