ரஜினி, கமல் இணைந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான்

 

ரஜினி, கமல் இணைந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் இன்று ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அனைவரும் மீண்டும் மார்ச் 5ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஜினி, கமல் இணைந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரஜினி கமல் இணைந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது. படத்தில் இரண்டு பேரும் நடித்துக் கொண்டிருந்தனர். இது அரசியல் படம் இதில் வாய்ப்பில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடையாது. எந்த கட்சியுடனும் எந்த குழப்பமும் கிடையாது, கூட்டணி கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி வேலை செய்து போகிறோம்.

நாம் தமிழர் கட்சி மக்களுடன் கூட்டணி வைத்து பயணிக்கிறோம். நாம்தமிழர் தமிழம் முழுவதும் தனித்து போட்டியிடும். கமலஹாசன், ரஜினி கூட்டணி அமைப்பது அவர்களது விருப்பம். நாங்கள் காமராஜர், உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தி மக்கள் பணி செய்துவருகிறோம். வேளாண் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வகுப்புவாரியாக கண்கெடுப்பது போல மொழிவாரியாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.