முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் சீமான்!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் சீமான்!

கடந்த வாரம் முதல்வர் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 3ம் நாள் சடங்கில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் சீமான்!

இதனையடுseசென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்திற்கு சென்று மு.க ஸ்டாலின், எல்.முருகன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து,முதல்வரின் தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் இன்று (19.10.2020) முகாம் அலுவலகத்திற்கு நேரில் வந்து, அண்மையில் உடல்நலக் குறைவால் காலமான எனது தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, ஆறுதல் கூறினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.