இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

 

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

தமிழக தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலின்போது இரு வேறு சொல்லாடல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அங்கீகரிக்கப்படாத கட்சிகள். இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதேசமயம் இந்தப் பாகுபாட்டால் பல சாதகமான அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும். உதாரணமாக நிரந்தரமான தனி சின்னம், தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது, கட்சியின் சின்னம் வாக்கு இயந்திரத்தில் முதலில் இருக்கும்படி செய்வது, பிரச்சார அனுமதி என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

இந்த அம்சங்கள் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இருக்கும் நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம், மதிமுக ஆகியவற்றுக்கும் அங்கீகரிக்கப்பட்டு சிக்கலில் இருக்கும் பாமகவுக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அங்கீகாரம் பெறுவதற்கென்று சில நிபந்தனைகளைத் தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறது. அந்த நிபந்தனைகளில் எதாவது ஒன்றை பூர்த்தி செய்தாலே மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு விடும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

நிபந்தனைகள் என்ன?

1.தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகள் வாங்கியதுடன், 2 எம்எல்ஏக்களைப் பெற்றிருக்க வேண்டும்.

2.இது இல்லையென்றால் பதிவான வாக்குகளில் 8% வாக்குகள் பெற்றாலே போதுமானது. எதிலும் ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை.

3.தமிழகத்தில் இருக்கும் மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். 234 தொகுதிகள் என்றால் 7 அல்லது 8 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

இந்த மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதால் திமுக, அதிமுக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக உள்ளன. பாஜக, காங்கிரஸால் இங்கே பெரியளவு சோபிக்க முடியவில்லை என்றாலும் அவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. அதனால் சிக்கல் இல்லை. பாமகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

இருப்பினும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியவில்லை. நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதால் அக்கட்சிக்கும் சிக்கல் எழுந்திருக்கிறது. பாமக 8 எம்எல்ஏக்களைப் பெறும் பட்சத்தில் சிக்கல் இல்லை. தேமுதிக கட்சிக்கும் இதே நிலை தான். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 4.5 கோடி என்பதால், அந்தக் கணக்கீட்டின்படியே கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்படும்.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் யூகமாக கட்சிகள் அங்கீகரிக்கப்படுமா என்பதைக் கீழே பார்க்கலாம்:

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டாலும் மேற்சொன்ன எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. இந்தத் தேர்தலில் ஒரு இடங்களில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அப்படியிருக்கையில் 36 லட்சம் வாக்குகள் (8%) பெற வேண்டும். அப்படி பெற்றுவிட்டால் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்டுவிடும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

விசிக, மதிமுக

மதிமுக ஆறு தொகுதிகளிலும் திமுக சார்பில் களமிறங்குவதால் அவர்கள் வெற்றிபெற்றாலும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அதனால் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை. விசிக ஆறிலும் வெற்றிபெற்றாலும் வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் தேர்தல் ஆணையம் ஆறில் வெற்றிபெற்றாலே அங்கீகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டே ஆறு தொகுதிக்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டதாய் தகவல் வெளியானது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி அங்கீகரிக்கும் பட்சத்தில் ஒரு இடம் பறிபோனாலும் 0.1 வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

அமமுக

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மிக மிக முக்கியவத்துவம் வாய்ந்த தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் அதிமுக வாக்குகளைப் பிரித்தாலும் டிடிவி போட்டியிடும் கோவில்பட்டியில் மட்டுமே வெற்றிவாய்ப்பு கூடிவருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வேறு எங்காவது கடும் இழுபறியில் ஜெயித்தால் 27 லட்சம் வாக்குகளுடன் (6%) இரு எம்எல்ஏக்களை பெற்றால் போதுமானது. இல்லையென்றால் 8% வாக்குகள் வாங்க வேண்டும். 8 எம்எல்ஏக்கள் பெறுவது சாத்தியமற்ற ஒன்று என்பதையே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றனர்.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதம் வைத்திருந்தாலும், அங்கீகரிக்கப்பட அது போதுமானதாக இல்லை. ஆகவே அந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. கமல் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரும் சிங்காநல்லூரில் துணைத் தலைவர் மகேந்திரனும் வெற்றிபெற்று 27 லட்சம் வாக்குகளைப் பெற்றால் போதுமானது.

இத்தனை வாக்குகள் வாங்கியே ஆகனும்?… நெருக்கடியில் இருக்கும் சீமான், டிடிவி, கமல் கட்சிகள்!

குறிப்பாக நாம் தமிழர் போன்று 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில் நின்றிருந்தால் 36 லட்சம் வாக்குகளை அள்ளியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் கூட்டணிக் கட்சிகள் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டது பின்னடைவே. இதைத் தாண்டி தனித்து அத்தனை லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தால் நிச்சயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

இறுதி நிலவரம்

மொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாமகவும் அமமுகவும் இந்தத் தேர்தலுக்குப் பின் அங்கீகரிக்கப்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கின்றன. வாங்கியிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்தக் கணக்குகள் மாறும் காட்சிகளும் மாறும். பொருத்திருந்து பார்க்கலாம்.