‘6 லட்சம் கோடி கடன்’.. வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பாங்க? : நக்கலடித்த சீமான்!

‘6 லட்சம் கோடி கடன்’.. வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பாங்க? : நக்கலடித்த சீமான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வெளியிட்டது. அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையின் தலைப்புகளை மு.க. ஸ்டாலின் வாசிக்க, எல்லாருக்கும் மெய் சிலிர்த்து போனது. தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு என்பன உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அன்றைய தினம் கதாநாயகனாகவே திகழ்ந்தது.

‘6 லட்சம் கோடி கடன்’.. வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பாங்க? : நக்கலடித்த சீமான்!

இலவசங்கள் ஏதும் இல்லாத திமுகவின் தேர்தல் அறிக்கை வெகுவாக பாராட்டைப் பெற்றது. ஆனால், அதிமுகவோ மீண்டும் ‘இலவசம்’ என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது. மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம், இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட அதிமுகவின் அறிவிப்புகளை எதிர்க்கட்சி தற்போது விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. ஃபேன், மிக்சி, கிரைண்டர் முடிந்து இப்போது வாஷிங் மெஷினா? என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது.

‘6 லட்சம் கோடி கடன்’.. வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பாங்க? : நக்கலடித்த சீமான்!

இந்த நிலையில், தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கும் போது இலவசமாக வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பார்கள் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விமர்சித்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

மேலும் கமல் குறித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஊதியமே கமலுக்கு போதும். அவர் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்றும் கூறினார்.