அதிமுக நல்ல உறவு.. திமுக கள்ள உறவு : சீமான் கடும் விமர்சனம்!

 

அதிமுக நல்ல உறவு.. திமுக கள்ள உறவு : சீமான் கடும் விமர்சனம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் யார் அடுத்த முதல்வர் என்று தெரிந்து விடும். முதல்வராக அரியணை ஏறத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோவை சிவானந்தா காலனியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக நல்ல உறவு.. திமுக கள்ள உறவு : சீமான் கடும் விமர்சனம்!

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் முதல்வராக ஆனதும் மஞ்சள் நோட்டீஸ் விட்டு அரசு திவாலாகிவிட்டதாக அறிவிப்பேன். கடன்களை மக்கள் தலையில் போட மாட்டேன். நாம் தமிழர் கட்சிக என்றைக்குமே தனித்து தான் போட்டியிடும். திமுக, அதிமுகவுக்கு சமூக நீதி பேசுவதற்கான தகுதி இல்லை. திருமாவளவன் ஆதி வழங்குடியினருக்கு 6ல் 2 தொகுதி மட்டுமே கொடுத்துக்கிறார் என்று விமர்சித்தார்.

அதிமுக நல்ல உறவு.. திமுக கள்ள உறவு : சீமான் கடும் விமர்சனம்!

தொடர்ந்து பேசிய சீமான், பாஜகவின் உண்மையான பி டீம் திமுக தான். தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க எங்களை திருடன் என்று சொல்கிறார்கள். அவர்கள் நாடகக்காரர்கள். அவர்களை போல யாருமே உலகத்தில் இருக்க முடியாது. அதிமுக பாஜகவுடன் நல்ல உறவு வைத்துள்ளது. திமுக கள்ள உறவு வைத்துள்ளது என்று தெரிவித்தார்.