“பிக் பாஸை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன்” – சீமான் விமர்சனம்!

 

“பிக் பாஸை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன்” – சீமான் விமர்சனம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. அக்கட்சியில் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, ஒருமித்த கருத்துக்களுடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அறிவிக்கப்பட்டது.

“பிக் பாஸை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன்” – சீமான் விமர்சனம்!

அந்த கூட்டத்தில் 40 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இன்று மீண்டும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நீதி மய்ய பிரமுகர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் கமல்ஹாசன், அந்நிகழ்ச்சியில் தேர்தல் குறித்து சூசகமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

“பிக் பாஸை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன்” – சீமான் விமர்சனம்!

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மையம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே அதிக வாக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.