• February
    19
    Wednesday

Main Area

Main



பெண்ணை கன்னத்தில் அறைந்த நடராஜர் கோயில் தீட்சதருக்கு சீமான் கண்டனம் !

Seeman
Seeman

சில நாட்களுக்கு முன்னர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை ஒழுங்காகச் செய்யவில்லை என்று தட்டிக் கேட்ட பெண் லதாவை அந்த கோவில் அர்ச்சகர் தர்ஷன் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

latha

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாகியுள்ள அர்ச்சகர் மீது சிதம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, பெண்ணை தாக்கியதால் அர்ச்சகர் தர்ஷனுக்கு 2 மாதங்கள் சஸ்பென்ட் மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து பொது தீட்சிதர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

latha

இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகருக்குக் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபாடு செய்ய வந்த லதா எனும் பெண்மணியை அவதூறாகப் பேசித் தாக்கிய தீட்சிதரின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

 

பெண்மணியைத் தாக்கிய தீட்சிதர் வெங்கடேசை கடும் சட்டப்பிரிவின் கீழ் உடனடியாகக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும். அன்றைக்குத் திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாட முயன்ற ஐயா ஆறுமுகசாமி சிவனடியாரைத் தாக்கினார்கள் தீட்சிதர்கள். அதன் நீட்சியாக, தற்போது வழிபாடு செய்ய வந்த பெண்மணியைத் தாக்கியிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.