“விலையை குறைத்து கொடு ,இல்லேன்னா துப்பாக்கியால சுடு”-பழக்கடைக்காரரை சுட்ட செக்யூரிட்டி..

 

“விலையை குறைத்து கொடு ,இல்லேன்னா துப்பாக்கியால சுடு”-பழக்கடைக்காரரை சுட்ட செக்யூரிட்டி..

இப்போது நாட்டில் பலருக்கிருக்கும் மன அழுத்தத்தில் எதற்கெல்லாம் துப்பாக்கியால் சுடுவது என்பதற்கு வரையறை இல்லாமல் போய்விட்டது .மாம்பழம் விலை குறைக்கவில்லை என்பதற்காக பழக்கடைக்காரரை, ஒரு செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் இதற்கு உதாரணம் .

“விலையை குறைத்து கொடு ,இல்லேன்னா துப்பாக்கியால சுடு”-பழக்கடைக்காரரை சுட்ட செக்யூரிட்டி..
நொய்டாவில் 25 வயதான பழ விற்பனையாளர் பர்தேசி .இவர் அங்குள்ள கோடா காலனி அருகே பழவண்டியில் பழம் விற்று கொண்டிருந்தார் .அப்போது இரவு பணியை முடித்து விட்டு அந்த வழியாக வந்த பாதுகாப்பு காவலர் 40 வயது சதேந்திர நாத் பாண்டே என்பவர் அந்த பழக்கடைக்காரரிடம் மாம்பழம் வாங்குவதற்காக வந்தார் .அப்போது அவர் பழக்காரரிடம் ,மாம்பழத்தினை விலை குறைத்து கேட்டுள்ளார் .அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ,இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது .இதனால் கோபமுற்ற செக்யூரிட்டி நேராக அருகிலுள்ள தன்னுடைய ஆபீசுக்கு சென்று துப்பாக்கியினை எடுத்து வந்து அந்த பழக்கடைக்காரரை சுட்டுவிட்டார் ,

“விலையை குறைத்து கொடு ,இல்லேன்னா துப்பாக்கியால சுடு”-பழக்கடைக்காரரை சுட்ட செக்யூரிட்டி..இதனால் கடுமையான வலியால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார் .அப்போது அந்த வழியே வந்த சிலர் அந்த பழக்கடைக்காரரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது .
இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செக்யூரிட்டி பாண்டேவை கைது செய்தனர் .அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .