ஜம்மு-காஷ்மீர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மசோதாவை தாக்கல் செய்து அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கியுள்ளது.