ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு…. முதல்வர் அசோக் கெலாட் அதிரடி நடவடிக்கை

ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு…. முதல்வர் அசோக் கெலாட் அதிரடி நடவடிக்கை

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில் ஜெய்ப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அம்மாநில சுகாராத்துறை அமைச்சர் ரகு சர்மா, தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் (உள்துறை), முதன்மை செயலாளர் (மருத்துவம் மற்றும் சுகாதாரம்) மற்றும் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு…. முதல்வர் அசோக் கெலாட் அதிரடி நடவடிக்கை
முதல்வர் அசோக் கெலாட்

அந்த கூட்டத்தில் ஜெய்ப்பூர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் முடிவை முதல்வர் அசோக் கெலாட் எடுத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆல்வார் மற்றும் சிகார் உள்பட 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு…. முதல்வர் அசோக் கெலாட் அதிரடி நடவடிக்கை
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

மேலும் சமூக மற்றும் மத விழாக்களுக்கான தடையை அக்டோபர் 31ம் தேதிவரை நீட்டிக்கவும அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம் இறுதி சடங்கில் 20 பேரும், திருமணங்களில் 50 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டி விட்டது.