• November
    12
    Tuesday

Main Area

Main



தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..!

பாஜக -யாகம்
பாஜக -யாகம்

பாஜக தமிழக தலைவர் எப்போது அறிவிக்கப்படுவார்... யார் அடுத்த தலைவர் என சில மாதங்களாக எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஏ.பி.முருகானந்தம், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படுவார்கள் என காத்திருந்தனர் காவி கட்சி தொண்டர்கள். 

modi

இந்நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பாஜக தமிழக தலைவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதவாவதற்கு காரணம் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் கோதாவில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.  அவருக்குள்ளும் தலைவர் பதவி ஆசை தறிகெட்டு ஆட்டம் போடுவதால், கும்பகோணம் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஒரு மணி நேரம் ரகசிய யாகம் நடத்தி இருக்கிறார். 

ponnar

இதற்கான ஏற்பாட்டை மாநில பொதுச் செயலாளர் ஒருவர் ரகசியமாக செய்திருக்கிறார். ஆனால், விஷயம் வெளியே கசிந்து வந்த கட்சியினர் சிலரையும், பொன். ராதாகிருஷ்ணன் சந்திக்க மறுத்து விட்டாராம். நினைத்த படி தலைவரானால் வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு திரும்ப வருகை புரிவாராம் பொன்னார்.

tamilisai

அதிமுகவில் தான் ஜெயலலிதா காலம் தொட்டு இப்போது வரை பதவிகளை பெற ரகசிய யாகங்களை அக்கட்சி நிர்வாகிகள் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் அதனையும் மிஞ்சும் வகையில் பாஜகவினர் யாகம் நடத்தத் தொடங்கி விட்டனர். இந்த ரகசிய யாகங்கள் தமிழகத்தில் தாமரையை மலர வைக்குமா..? 

2018 TopTamilNews. All rights reserved.