ஓயாத கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு பாதுகாப்பு!!

ஓயாத கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு பாதுகாப்பு!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

ஓயாத கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு பாதுகாப்பு!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மணிப்பூர், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசின் உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மொத்தம் இதுவரை 56 நபர்கள் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஓயாத கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு பாதுகாப்பு!!

தொடர்ந்து பேசிய அவர், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டால் 98% உயிருக்கு பாதுகாப்பு. அதேபோல் ஆய்வின் முடிவில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 4,868 காவல்துறையினரில் 15 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் பலியானதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட 4,720 பேரில் 2 பேர் ,மட்டுமே உயிரிழந்தது தெரியவந்துள்ளது என்றார்.