2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் – தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள்

 

2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் – தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள்

2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்பட உள்ள தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்களை இந்த கட்டுரையில் காண்போம்!

இந்தாண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் சந்திர கிரகணம் ஏற்பட்டது. சமீபத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 5-ஆம் தேதி இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இது பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகண நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணைந்திருக்கும்போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் – தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள்

இந்தியாவில் காலை 08:38 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் 10 மணியளவில் உச்சத்தை அடையும். பின்னர் காலை 11:22 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடைகிறது. அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. பகல் நேரத்தில் சந்திரன் தெரியாது என்பதால் இந்த பெனும்பிரல் சந்திர கிரகணத்தை இந்த முறை இந்தியாவில் உள்ளவர்களால் பார்க்க முடியாது. ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்த கிரகணம் தெரியும்.