பெண்கள் பள்ளி எதிரே இரண்டாம் குத்து போஸ்டர்- கிழித்து எரிந்த நபரின் வைரல் வீடியோ !

 

பெண்கள் பள்ளி எதிரே இரண்டாம் குத்து போஸ்டர்- கிழித்து எரிந்த நபரின் வைரல் வீடியோ !

கோவையில், பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை ஒருவர் கிழித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெண்கள் பள்ளி எதிரே இரண்டாம் குத்து போஸ்டர்- கிழித்து எரிந்த நபரின் வைரல் வீடியோ !

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார், இயத்தில் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்த நிலையில் நேற்று டீசர் வெளியிட்டனர். இதற்கான போஸ்டர்களை நேற்று கோவை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. கோவையில் தேர்முட்டி பகுதியில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே உள்ள சுவற்றில் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

பெண்கள் பள்ளி எதிரே இரண்டாம் குத்து போஸ்டர்- கிழித்து எரிந்த நபரின் வைரல் வீடியோ !

அவற்றை, அந்த வழியாக சென்ற நகைகடை தொழிலாளர் தினேஷ் என்பவர் அந்த போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எரிந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த திரைப்படத்துக்கு, மூத்த இயக்குனரான பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.